திரு. இராசதுரை ரமணி (ரவி)

இராசதுரை ரமணி (ரவி)

தோற்றம்: 09 ஆகஸ்ட் 1962 - மறைவு: 16 செப்டம்பர் 2025

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - ஹெர்னை நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை ரமணி அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசதுரை - சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம் - லீலாவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தாரணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம் (சீனியம்மா) அவர்களின் வளர்ப்பு மகனும்,

ஆர்த்திகா, அனுசியா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

கெங்காதரன், காலஞ்சென்ற இரகுராதா, சசிகலா, ஜெயகலா, சந்தனகோபால், பரமேஸ்வரி ஆகியோரின் ஆசைச் சகோதரனும்,

ரஜினா, ரமணி, ரஜிலா, ரமிலா, ரதீஷ், ராதிகாவின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2025 04:00)