Mrs. Ramani Sivakumar
(Teacher- Bishop's College, Colombo)
Date of Birth: 22 October 1968 - Deceased: 28 June 2024
இந்தியா-திருச்சி மாவட்டம் சாத்தனுர் கிராமத்தை பூர்விகமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரமணி சிவகுமார் அவர்கள் 28-06-2024 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பெருமாள்பாளையம் காலஞ்சென்ற திரு. நடராஜபிள்ளை-செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.வைத்திலிங்கம் (ராகலை)-லீலாவதி தம்பதியினரின் மருமளும்,
திரு.வை.சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிஷாந்தி, நிரோஷ், சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முபஷிரின் அன்பு மாமியாரும்,
விஜயகுமார் (அவுஸ்திரேலியா), சாந்திகுமார், மல்லிகா, திலகா ஆகியோரின் அண்ணியும்,
சுகுமார் (கனடா), ஶ்ரீதரன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவனேஷ்வரி (கனடா), துஷானி (லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,
பி.சண்முகம், பி.உலகநாதன் (Proline Tex), வி.திலகவதி (அவுஸ்திரேலியா), சா.மேஹனா ஆகியோரின் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இறுதி அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் (7/3, Crocktain Mawatha, Hekitta, Wattala) வைக்கப்பட்டு, 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
