திரு. இராமசாமி சக்திவேல்

இராமசாமி சக்திவேல்

தோற்றம்: 21 மார்ச் 1943 - மறைவு: 27 ஆகஸ்ட் 2025

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Montreal - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி சக்திவேல் அவர்கள் 27-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமசாமி - தையல்முத்து தம்பதியினரின் இளைய மகனும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் - இந்திராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

குணாளினி, காபலீஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசூரியர், நந்தினி, ரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரிணி, மெலணி, நிவேதா, சுவேதா, ரஜிதா, அஸ்மிதா, சௌமியா, நிஷா, மதுரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான அனந்தலட்சுமி, அனந்தராசா, கமலாதேவி, சீதாதேவி, பாரததேவி ஆகியோரின் அன்புத் தம்பியும்,

காலஞ்சென்ற சிவகுரு, ஞானகலை, காலஞ்சென்றவர்களான தவராஜசிங்கம், அருட்சோதி, கிருட்டினர் மற்றும் சித்திரலேகா, உதயகுமாரி, றஞ்சனகுமாரி, நந்தனகுமாரி, சௌந்தரராஜன், ஜோதிசங்கர், பிருந்தாவதி, காலஞ்சென்றவர்களான ரவிசங்கர், ஜெயசங்கர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 - 12.00 மணி வரை Rideau Fumeral Home (4239 Sources Blvd, Dollard - Des Ormeaux, QC H9B 2A6) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2025 04:00)