திரு. ராமசாமி துஷாந்த் கவுண்டர்

(றீகல் என்டர்பிரைசஸ் - ஹட்டன்)

ராமசாமி துஷாந்த் கவுண்டர்

தோற்றம்: 06 பெப்ரவரி 1984 - மறைவு: 15 மார்ச் 2026

இந்தியா - தமிழ்நாடு நாமக்கல் எரனாபுரம், நோட்டன் பிரிஜ் K.P.N. நல்லுசாமி அன் கோ. ராமசாமி கவுண்டர் - சரோஜனா தம்பதியினரின் செல்வப்புதல்வனும், மொபைல்ஸ் K.S ஹட்டன் ராமசாமி கவுண்டர் - நீலாஜோதி தம்பதயினரின் மருமகனும், 

காலஞ்சென்ற நோட்டன் செல்லப்பன் கவுண்டர் - செல்லம்மாள் தம்பதியினரின் பேரனுமான K.R. துஷாந்த் அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சைனுதா அவர்களின் அன்புக் கணவரும்,

துவிக்‌ஷாவின் பாசமிக்க தந்தையும்,

நிஷாந்தினி, சசிதரா ஆகியோின் அன்புச் சகோதரனும்,

சண்முகம் (றீகல் என்டர்பிரைசஸ்), கீர்த்திராஜ் (பிரான்ஸ்), தியாகராஜ் (K.P.N நோட்டன் பிரிட்ஜ்) ஆகியோரின் மைத்துனரும்,

சனோஜ், சஜீவன் ஆகியோரின் மாப்பிள்ளையும்,

காலஞ்சென்ற நல்லுசாமி கவுண்டர் - செட்டியம்மா (நாமக்கல்), முத்துசாமி கவுண்டர் - ருக்மணிதேவி (பண்டாரவளை மோட்டர் சேவிஸ் ஸ்டேஷன்), நாகலிங்கம் கவுண்டர் - தவமணி தேவி (K.N.K டெக்ஸ் கொழும்பு-11) தம்பதியினரின் பெறா மகனும்,

நித்தேஷ், அக்‌ஷா, கிஷேன் ஆகியோரின் தாய் மாமாவும்,

தில்லைநாதன் - அனிதா தம்பதியினரின் மருமகனும்,

பிரணிகா, ரித்தின் ஆகியோரின் மாமாவும்,

பிரியாளினி (இந்தியா), சிவபிரியா (கொழும்பு), கோமதி (கொழும்பு), கோகிலா, மல்லிகா, கவிதா, மோகன்குமார் (இந்தியா) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் நோட்டன் பிரிட்ஜ் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-03-2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2026 00:00)