திருமதி. ராமசாமிபிள்ளை சிவபாக்கியம் (மகேஸ்வரி)

ராமசாமிபிள்ளை சிவபாக்கியம் (மகேஸ்வரி)

தோற்றம்: 12 மார்ச் 1941 - மறைவு: 06 ஜூன் 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் கரியமாணிக்கம் கிராமம் (கண்டி ரத்ன மாளிகை) காலஞ்சென்ற ராமசாமிபிள்ளை அவர்களின் அன்பு மனைவி திருமதி. சிவபாக்கியம் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:15 மணியளவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், தத்தமங்கலம் கிராமம் குருதெனிய காலஞ்சென்ற மாரிமுத்துபிள்ளை - தைலம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம்பிள்ளை - பச்சையம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தேவிகாவின் அன்பு தாயாரும்,

முகுந்தனின் (ஆராதனா ஜீவலர்ஸ் - கண்டி) அன்பு மாமியாரும்,

ஸ்ரீதீபன், சிந்தூரி, ஷிவராம் ஆகியோரின் அம்மாயியும்,

பலகொல்ல சிவந்தலிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை - சிவபாக்கியம் (கலஹா) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-06-2025 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் (இல-344/10, பேராதெனியா வீதி, கண்டி) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் கண்டி மஹிய்யாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2025 04:00)