திரு. ரமேஷ் சிறிதரன்
(BSc Computer Science (Carleton University), சாவகச்சேரி மகளிர் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, இந்துக் கல்லூரி கொழும்பு)
தோற்றம்: 14 ஏப்ரல் 1973 - மறைவு: 27 டிசம்பர் 2025
யாழ். தபாற்கந்தோர் வீதி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா - Markham யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரமேஷ் சிறிதரன் அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிறிதரன் (JST Sri) - ஜெயராணி தம்பதியினரின் மூத்த மகனும்,
முத்துக்குமாரு - தங்கம்மா மற்றும் இராமலிங்கம் - பராசக்தி தம்பதியினரின் அன்புப் பேரனும்,
சுதந்தி (ஓமான்), சுதர்சினி (தர்சி- இலண்டன்), புவிசுதேஷ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சிவகுமார் (ஓமான்), நிரஞ்சன் (இலண்டன்), கீர்த்தனா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-01-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
