Mr Ramu Muruganathan
(மின்சார தொழில்நுட்பவியலாளர்)
Date of Birth: 29 November 1969 - Deceased: 17 January 2024
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமு முருகானந்தன் அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமு - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
திரு.திருமதி சந்தனத்தின் அன்பு மருமகனும்,
மலர்மதியின் பாசமிகு கணவரும்,
தினேஷிகா, ரொஷேன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாதேவி, யோகானந்தன் (லண்டன்), காலஞ்சென்றவர்களான சுலோச்சனா, சிவமலர், சிவானந்தன் (ஐக்கிய அமெரிக்கா), செல்வானந்தன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் சகோதரரும்,
யோகமூர்த்தி (தினக்குரல்), கணேஷன், செல்வி யசோதரா, மலர்விழி, ரஞ்சினி (ஐக்கிய அமெரிக்கா), மதிவதனா (லண்டன்) ஜெயசிறி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனரும்,
பிரேமசந்திரன், ராஜேஸ்வரி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் புஞ்சிபொரளை லங்கா மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 20-01-2024 காலை தகனக்கிரியைகளுக்காக பொரளை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
