திரு. இராமுப்பிள்ளை கந்தசாமி (K.R.கந்தசாமி)

(பிரபல வர்த்தகர்- K.R கந்தசாமி அன்கோ- வவுனியா, குமரன் அன்கோ - யாழ்ப்பாணம்)

இராமுப்பிள்ளை கந்தசாமி (K.R.கந்தசாமி)

தோற்றம்: 15 அக்டோபர் 1940 - மறைவு: 25 மே 2024

யாழ். பாலாவோடை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் இராமுப்பிள்ளை-செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தின்-பரிமளம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அமுதமணி அவர்களின் அன்புக்கணவரும்,

பேரின்பமலர், ஶ்ரீஹரன் (சிறைச்சாலை திணைக்களம் - யாழ்ப்பாணம்), ஶ்ரீபரன் (சுகாதார அமைச்சு - வடமாகாணம்), ஶ்ரீதரன் (பிரதம செயலாளர் செயலகம் - வடமாகாணம்), ஶ்ரீகுமார் (உரிமையாளர் - குமரன் அன்கோ), சுதாகரன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராதிகா (யாழ். இந்து மகளிர் கல்லூரி), தர்ஷினி, சோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, தில்லையம்பலம், வேலுப்பிள்ளை, ஆறுமுமகம், சுப்பிரமணியம், கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, செல்லம்மா, தேவநாயகி, இராசமணி, யோகராசா மற்றும் யோகரட்ணம், தவமணி, நவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகிஷன், அபிலாஷ், கிரிஷிகா, கிரிஷன், கவின், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக காரைநகர் தில்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி
98/10, பலாலி வீதி, திருநெல்வேலி.
 
தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/05/2024 04:00)