Mr. Ramupillai Sivasambu
(ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ அதிகாரி)
Date of Birth: 10 January 1936 - Deceased: 19 August 2024
யாழ். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராமுப்பிள்ளை சிவசம்பு அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு-மரகதமொழி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மா (புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சரோஜா (பிரித்தானியா), பிரபாகரன் (பிரான்ஸ்), ரசிகரன் (பிரித்தானியா), குலசேகரன் (கனடா), சந்திரசேகரன் (பிரித்தானியா), ஞானசேகரன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுப்பிரமணியம் (பிரித்தானியா), சாமினி (பிரான்ஸ்), சிவசோதி (பிரித்தானியா), விஜிதா (கனடா), கலாஜினி (பிரித்தானியா), சிவானந்தி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரம்யா, மது, வினோத், புருசோத், பிரதாப், மேனுஜா, சத்துருனியா, விக்ரம், மரகதம், மதுரா, கௌதம், அபிநயா, அஸ்வின், மிதுஷா, குசால், கிருஸ்ணா, சேரன், அருண் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், லீலாவதி, மகேஸ்வரி, மருதலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, கந்தையா, கந்தசாமி, ராஜலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், பொன்னம்மா, பார்வதிப்பிள்ளை, குமாரசாமி, சிவகாமிப்பிள்ளை, மருதையினார் மற்றும் வெற்றிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
