திரு. இராமுப்பிள்ளை சுகுணதீரன்

(இளைப்பாறிய கணக்காளர், யாழ் கல்வித் திணைக்களம், பிரதி கணக்காளர்- வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு)

இராமுப்பிள்ளை சுகுணதீரன்

மறைவு: 16 மே 2024

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமுப்பிள்ளை சுகுணதீரன் அவர்கள் 16-05-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை-தங்கமணி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான தம்பு-தங்கம் தம்பதியினரின் அருமை மருமகனும்,

காலஞ்சென்ற வசந்தாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,

கமலவேணி, ஞானவேணி, பாலவேணி, காலஞ்சென்ற ஞானதீரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தனஞ்சயன், சுமங்கலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயந்தி, கணேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விவேதன், தரணிகரன், பிரகேஷ், ஷோபினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 1.00 மணி முதல் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/05/2024 04:00)