Mrs. Ranga Barth

Ranga Barth

Date of Birth: 09 May 1949 - Deceased: 15 May 2025

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சென்னை , ஜேர்மனி, இந்தோனேசியா,   Buenos Aires - ஆர்ஜென்டினா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரங்கா பார்த் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று  Buenos Aires, ஆர்ஜென்டினாவில் இறையடி சேர்ந்தார்.

அனனார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி விவேகானந்தன் - இராஜரத்தினம் அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஜேர்மனியைச் சேர்ந்த திரு.திருமதி. பார்த் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

றுடோல்வ் பார்த் அவர்களின் ஆசை மனைவியும்,

மாதங்கி, மாயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஆழிக்குமரன் ஆனந்தன், ரஞ்சிதமணி (ரஞ்சி - ஐக்கிய அமெரிக்கா), ரட்னேஸ்வரி (ராதா - ஐக்கிய இராச்சியம்), நித்தியானந்தன் (ரஞ்சன் - ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்ற ரூபமணி, சிவானந்தன் (பாபு - ஜேர்மனி), ரவீந்திரானந்தன் (ரவி - ஐக்கிய இராச்சியம்), கருணானந்தன் (கண்ணன் - ஐக்கிய இராச்சியம்), கோகிலா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மானல், ரவீந்திரன், சுனேந்திரதாஸ், செல்வராணி, ரங்கநாதன், மகாமாசி தேவி, லதா, கலைவாணி, வரதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் 19-05-2025 திங்கட்கிழமை நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2025 04:00)