Mr. Rangarajaha Rediyar Vignesh
Deceased: 09 May 2025
நீர்கொழும்பை சேர்ந்த திரு. ரெங்கராஜ் ரெட்டியார் விக்னேஷ் (27 வயது) அவர்கள் 09-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இரவு 11.00 மணியளவில் கொழும்பில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், எஸ்.ரெங்கராஜ் ரெட்டியார் - காலஞ்சென்ற ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
யபினேஷ், செல்வி .ஜனார்த்தனா ஆகியோரின் சகோதரனும்,
இரத்தினபுரி எந்தானையை சேர்ந்த காலஞ்சென்ற சீனிவாசகம் ரெட்டியார் - எஸ்.சீதையம்மா தம்பதியினரின் மகன் வழிப்பேரனும், நீர்கொழும்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான துரைசாமி ரெட்டியார் - மீனம்மா தம்பதியினரின் மகள் வழிப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் (No-12, Cannel Rd, Negombo) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
