திருமதி. ராணி கனகலிங்கம்
மறைவு: 13 செப்டம்பர் 2026
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ராணி கனகலிங்கம் அவர்கள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ரொரன்றோவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசையா - யோகம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதன் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
றோய், டுஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தவம் (இலங்கை), தேவி (இங்கிலாந்து) மற்றும் நிமல் (இங்கிலாந்து), பேபி, ராசாத்தி (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணரத்தினம் (லக்சம்பர்க்), தர்மலிங்கம் (இந்தியா), சரஸ்வதி (இலங்கை), பபா (ஹாலந்து) மற்றும் காலஞ்சென்றவர்களான பாக்கியம் (இலங்கை), கனகம்மா (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் (இலங்கை), நந்தி (இங்கிலாந்து), ரங்கன் (இங்கிலாந்து), தயாளன், கேசா (இங்கிலாந்து) ஆகியோரின் மைத்துனியும்,
ஆர்த்தி, சௌதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாலா, நோவா, கியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-09-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 20-09-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 10:00 மணி வரையும் Ajax Cremation & Visitation Centre (384 Finley Ave, Ajax. ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்நது இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கனகலிங்கம் (கணவர்):- +1 416 662 0380
றோய் (மகன்):- +1 416 659 6209
டுஷன் (மகன்):- +1 416 886 7323
www.tamilthakaval.org
