Mrs. Ranjini Kulasegaran

Ranjini Kulasegaran

Deceased: 10 July 2025

யாழ்.கரவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், இல- 41, டச்சு வீதி கோப்பாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரஞ்சினி குலசேகரன் அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், கந்தப்பு - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் ஏக புத்திரியும்,

சிவராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,

குலசேகரன் (ஓய்வு நிலை பிரதேச முகாமையாளர் - இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,

தர்சினி (உதவி அதிபர் - யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி), சுபாசினி (ஆசிரியை - யாழ். கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்), யோகேந்தினி (உதவி அதிபர் - வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி), செல்வி. டனுஷினி (ஜனசக்தி காப்புறுதி நிறுவனம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கருணாகரன் (அதிபர் - யாழ். மீசாலை கமலாம்பிகை வித்தியாலயம்), பரமேஸ்வரன் (ஆசிரியர் - யாழ். சென்மேரிஸ் வித்தியாலயம்), துளசிதன் (தாதிய உத்தியோகத்தர் - மந்திகை ஆதார வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷரவணப்ரியன், நிஷோதா, பிரமோத், சகீர்த்தனன், தாரகன், ஹர்ஷியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் 11-07-2025 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/07/2025 18:50)