திருமதி. இரஞ்சனி சண்முகம் நாகசோதிலிங்கம்
மறைவு: 02 நவம்பர் 2020
அனலைதீவு 6ம் வட்டாராத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இரஞ்சனி நாகசோதிலிங்கம் அவர்கள் இன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான சண்முகம், தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
திரு. நாகசோதிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரமணி, காலஞ்சென்ற இரவீந்திரன், இரதிமலர், சாந்தி, ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நதீகா, குபீரன், ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசலிங்கம், சோதிமாலா, காலஞ்சென்ற சிவானந்தன், சிறீலவராஜன், ரூபன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
திருமதி. இரஞ்சனி நாகசோதிலிங்கம் அவர்களின் மறைவுக்கு அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா அமைப்பின் நிகழ்வுகளிலும் செயற்பாடுகளிலும் ஒன்றிணைந்து வலுச்சேர்த்தவர்களில் திருமதி. இரஞ்சனி நாகசோதிலிங்கம் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கும் குடும்பத்தினருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சிறீ: +1 905 782 2828
ரூபன்: +1 647 297 2355
ரதி: +1 905 586 1226
அனலைதீவு கலாச்சார ஒன்றியம் – கனடா
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/11/2020 15:29)
