திருமதி. இரங்கநாயகி ஜெயரட்ணம் (செல்லம்)
(ஒய்வுபெற்ற தாதியர் யாழ் , புங்குடுதீவு, சாவகச்சேரி -அரசினர் வைத்தியசாலை)
தோற்றம்: 26 நவம்பர் 1941 - மறைவு: 25 ஆகஸ்ட் 2026
யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், France - Tours யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஜெயரட்ணம் இரங்கநாயகி அவர்கள் 25-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா (கிளாக்கர்) - முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாபு (பிரான்ஸ்), காலஞ்சென்ற ரூபன் (சுவிஸ்), சிவாஜனி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தையல்நாயகி (பாக்கியம்), தெய்வநாயகி (குணம்-ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விமலாதேவி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜசீன், றேனுஜி, றெஜீன், சரண்யா, சந்தோஷ், கிருசாந் ஆகியோரின் நேசம்மிக்க பேத்தியும்,
றேகன், றெஜீனா ஆகியோரின் செல்லப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, துரையப்பா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-08-2026 வெள்ளிக்கிழமை முதல் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை வரை முற்பகல் 10:00 - இரவு 8:00 மணி வரை Chambre Funéraire Internationale (266 ,rue du Général Renault, 37000 Tours) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 31-08-2026 திங்கட்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் Crématorium de Tours (Rue des Landes 37320 ESVRES -SUR -INDRE) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பாபு:- +33 652 181 857
சிவாஜினி:- +41 789 308 141
www.tamilthakaval.org
