Mr. Rasadurai Visiththiramoorthy

Rasadurai Visiththiramoorthy

Date of Birth: 28 March 1955 - Deceased: 19 July 2026

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகை அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், புளியங்கண்டு பிள்ளையார் கோவிலடி ஆனைக்கோட்டையை வாழ்விடமாகவும், கனடா - Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ராஜதுரை விசித்திரமூர்த்தி அவர்கள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று Scarborough இல் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜதுரை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஸ்ரீபதிச் செட்டியார் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுகேஷினி (துர்க்கா- கனடா), சுரேமினி (ரேகா- கனடா), நிசோத் (கரன் – கனடா), சுபாசினி (கண்ணகி- கனடா), நிசாந் (நிஷ்- கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

புஸ்கரன் (கனடா), கமல் (கனடா), சுபாஜினி (இலங்கை), பகீரதன் (கனடா), Tina (கனடா) ஆகியோரின் அருமை மாமனாரும்,

வைஷ்ணவி, வசீகரன், இனியா, Bindhu, சுருதி, அக்‌ஷரா, ஆதித்தி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

Narina அவர்களின் ஆசை அப்பப்பாவும்,

காலஞ்சென்றவர்களான உருத்திரமூர்த்தி, தவராசமூர்த்தி, செல்லமணி மற்றும் கேதீஸ்வரி (இலங்கை), சந்தனகுமாரி (இலங்கை), சிவானந்தமூர்த்தி (இலங்கை), உதயராணி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவனேஸ்வரி (இலங்கை), வசந்தி (சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சந்திரபாலன், பாலேந்திரராஜசிங்கம் மற்றும் மோகனராஜ் (இலங்கை), புஸ்பகலா (இலங்கை), காலஞ்சென்ற கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, திலகராஜசிங்கம், செல்வராணி மற்றும் இந்திராணி, தர்மராணி, திருச்செந்தூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரசர்மா, சிவசுப்பிரமணியம், சண்முகரட்ணம் மற்றும் உதயரட்ணம் (கனடா), மாலினி (கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-07-2026 திங்கட்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/07/2026 00:00)