திரு. இராசையா விக்கினராஜா (கண்டுமாமா)

இராசையா விக்கினராஜா (கண்டுமாமா)

தோற்றம்: 03 டிசம்பர் 1957 - மறைவு: 16 டிசம்பர் 2024

யாழ். பனிப்புலம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், Huckelhoven-ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா விக்கினராஜா அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-தங்கமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,

குருலிங்கம்-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அன்புமலர், நாகரத்தினம், பவளமலர், செல்வராஜா மற்றும் புவனேந்திரம், ஜெராஜா, பாரிசாதமலர், புஷ்பராஜா, தேவராஜா ஆகியோாின் அன்புச் சகோதரனும்,

ஜெகரஞ்சனா, யதுசன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

ஜெயகாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

அஸ்வினி, சுஜேய், டிலானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 - 3.00 மணி வரை Schmitt-Moos Beerdigungsinstitut (Wilmersdorfer Str.63-67, 52068 Aachen, Germany) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2024 05:00)