திரு. ராசையா அங்கண்ணன் (ஜெகநாதன்)

ராசையா அங்கண்ணன் (ஜெகநாதன்)

தோற்றம்: 24 அக்டோபர் 1954 - மறைவு: 30 டிசம்பர் 2025

இந்தியா - நாமக்கல் மாவட்டம் வளையாப்பட்டி கிராமம், இல- 163/108, கலுகல்ல மாவத்தை, கேகாலைச் சேர்ந்த திரு. ராசையா அங்கண்ணன் அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராசையா - அலமேலு முதலியார் தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. துரைசாமி தம்பதியினரின் மருமகனும்,

ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்துமதி (ஆசிரியை), மனோகரன் (ஆர்த்தி ஜீவலரி), அஜந்தன் (ஆர்த்தி ஜீவலரி) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

இலங்கேஸ்வரனின் (கொழும்பு) அன்பு மாமனாரும்,

ராஜகோபால் முதலியார் (இரத்தினபுரி), காலஞ்சென்ற மனோகரன் முதலியார் (பாதுக்க), முருகையா முதலியார் (பாதுக்க) ஆகியோரின் மாப்பிளையும்,

ராஜேஸ்வரி (இங்கிரியா), பத்மினி (இரத்தினபுரி) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நாகரத்தினம் தம்பதியினரின் சம்பந்தியும்,

நிவேதிகாவின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-01-2026 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் அன்னாரது கேகாலை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-01-2026 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் திருவுடல் கேகாலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2026 00:00)