திரு இராசையா பாலச்சந்திரன் (சந்திரன்)
தோற்றம்: 17 ஆகஸ்ட் 1946 - மறைவு: 03 மார்ச் 2024
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியா, லண்டன், கொக்குவில் ஆகிய இடங்களை வசித்தவரும், தற்போது தாவடி வேம்படி முருகமூர்த்தி கோவிலடியை வசிப்படிமாகவும் கொண்ட திரு. இராசையா பாலச்சந்திரன் அவர்கள் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - செல்லம்மா தம்பதியினரின் புதல்வனும்,
தம்பித்துரை - இரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,
தங்கேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
சுரேஸ்குமார் (லண்டன்), செந்தில்குமார், P.S. குமரன் (புவியியல் ஆசிரியா்), சஞ்ஜீவன் (போத்துக்கல்), தணுசா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபோதினி (லண்டன்), அங்கயற்கன்னி (ஆசிரியை - யா/கோண்டாவில் இந்துக் கல்லூரி), பிரவீணன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், அன்னலட்சுமி, ஞானம்மா மற்றும் தவராசலிங்கம் (லண்டன்) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தனபாலசிங்கம், பரமேஸ்வரி, பாலச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
பிரதிஸ்கா, தக்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-03-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிக்கு கொக்குவில் தாவடி வேம்படி முருகமூர்த்தி கோவிலடியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, கோம்பையன்மணல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
