Mr. Rasaiya Neasarajaha
(ஓய்வு பெற்ற அதிபர் - உதவிக்கல்விப்பணிப்பாளர்)
Date of Birth: 05 November 1937 - Deceased: 11 January 2025
அம்பாறை - அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், திருக்கோவில், சிட்னி - அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா நேசராஜா அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,
நடராசா - சௌந்தரம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கோமதி அவர்களின் அருமைக்கணவரும்,
கரன் (அவுஸ்திரேலியா), சங்கரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருமாவளவன், அபராஞ்ஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுருதி, சஜன் ஆகியோரின் அம்மப்பாவும்,
அக்ஷதன் ஹரிஸ், கவின் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
நீலாம்பிகை, புவனேஸ்வரி, சாத்வீகராஜா, ஜெகதாம்பிகை, காலஞ்சென்ற இராஜலெட்சுமி, சிவானந்தராஜா, லோகிதராஜா, நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
பூமதி, ரவிமதி, நவநீதன், தவநீதன், மேகநீதன், சந்திரமதி ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியையும், அஞ்சலி செலுத்தலும் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.15 - நண்பகல் 12.30 மணி வரை Altona Memorial Park Chapel of Repose (Melbourne, Victoria, Australia) இல் நடைபெறும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
