Mr. Rasiah Nithiyanantham

Rasiah Nithiyanantham

Date of Birth: 13 July 1953 - Deceased: 12 February 2025

யாழ்,  அளவெட்டியை பிறப்பிடமாகவும், தளுபத்தை - நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா நித்தியானந்தம் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும் 

கனகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும், 

பாஸ்கரன் (சுவிஸ்), சரோஜினி தேவி (பிரான்ஸ்), நகுலேஸ்வரன், நவரட்ணம், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், கோபாலன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

நிரோசன் (கனடா), ஹரிகரன், அனுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஹம்சா, காவ்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஹனிஷ்கா, நிவிஷ்கா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-02-2025 சனிக்கிழமை முதல் நீர்கொழும்பு ஆவேமரியா (Ave Maria Hospital Negombo) அருகில் உள்ள W. S. FERNANDO & SON) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:10 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:20 மணியளவில் புகழுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/02/2025 05:00)