திரு. இராசையா சண்முகராசா (கிளி)
தோற்றம்: 24 மே 1956 - மறைவு: 06 ஏப்ரல் 2026
"வாழ்வாங்கு வாழ்ந்து எமை விட்டுப் பிரிந்த எங்கள் குடும்பத் தலைவன்"
யாழ். நவுண்டில் நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வதிரி நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா சண்முகராசா அவர்கள் 06-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்-பாலசரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுகிர்தராணி (பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா (பிரித்தானியா), சுஜீவன் (கனடா), சுதர்சன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தசேரனின் அன்பு மாமனாரும்,
அக்சிகா, அக்சரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
இராசேந்திரம், பாலசுப்பிரமணியம் (கனடா), இராஜேஸ்வரி ஆகியோரின்
அன்புத் தம்பியும் ஆவார்.
அன்னாரது ஈமைக்கிரியைகள் 08-04-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் ஞானியா வளவு, வதிரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 01:00 மணியளவில் திருவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
