திரு. இராசையா ஶ்ரீஷண்முகராஜா
மறைவு: 03 நவம்பர் 2025
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா ஶ்ரீஷண்முகராஜா அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லூர் பண்டிதர் சு. இராசையா - பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற தமிழ்மணி விவேகானந்த முதலியார் - நாகரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற வத்சலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. சக்தியவாணி, சோபியவாணி, குணாதீதன் ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,
Dr. கிரிதரன், கெளசிகன் ஆகியோரின் மாமாவும்,
அகர்ணிகா, அஷ்வந் ஆகியோரின் பாசமுள்ள அம்மப்பாவும்,
காலஞ்சென்ற இந்திராதேவி, Dr. ஶ்ரீ இரவீந்திரராஜா, ஶ்ரீதரன், ஶ்ரீபதி, ஶ்ரீசிவகுமாரன், ஶ்ரீகாந்தன், ஶ்ரீஇந்திரன், காஞ்சனா, ஶ்ரீரங்கன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று தாமரைக்கேணி, மட்டக்களப்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
