திருமதி. இராசலட்சுமி சண்முகலிங்கம்
தோற்றம்: 12 ஜனவரி 1938 - மறைவு: 11 ஆகஸ்ட் 2024
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், சிறாம்பியடியை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலட்சுமி சண்முகலிங்கம் அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-தங்கமுத்து தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜ்குமார், ஜெயக்குமார், நந்தினி, சுதர்சினி, கமலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாமினி, மதனி, நந்தன், சற்குணராஜா, சோதிகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சன்மித்தா, சேதுயன், டிஷானி, சுபேதா, ஜோதிஷா, சகானா, திவ்யன், யேசான் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், மங்கயற்கரசி, நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-08-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00-10.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
