Mrs. Rasamani Thangarasa
Date of Birth: 15 July 1932 - Deceased: 15 July 2025
யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - மொரட்டுவ சொய்சாபுர தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமணி தங்கராசா அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இரவு இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தங்கராசா (இ.போ.ச - கோண்டாவில்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, செல்வமணி, இரத்தினசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, புஸ்பராணி ஆகியோரின் மைத்துனியும்,
Dr. சண்முகதாசன் (இலண்டன்), விமலதாசன் (புத்தூர்), உமாசங்கர் (பொறியியலாளர் - ஐக்கிய இராச்சியம்), நிர்மலா (கொழும்பு) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
Dr. தனலக்ஷ்மி (இலண்டன்), சுமதி (பொறியியலாளர் - ஐக்கிய இராச்சியம்), மயில்வாகனம் (கொழும்பு), வசந்தாதேவி (புத்தூர்), Dr. ரஞ்சிதகுமார் (கனடா), சதீஸ்குமார் (கனடா), சோபனா (கனடா), தர்ஷனா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுஷா, சுவேந்திரகுமார், ஜனனி, கிருபாகரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
தினேஷ் (ஐக்கிய இராச்சியம்), லிலோஷன், கார்த்திகா, சஜீவன், மயூரன் (ஐக்கிய இராச்சியம்), அர்சுன் (ஐக்கிய இராச்சியம்), செந்தூரன் (புத்தூர்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிருந்துவின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-07-2025 வியாழக்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
