Mr Rasarathinam Rameshwaran
Deceased: 15 January 2020
இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் நோர்வேயை (Norway) வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் இராமேஸ்வரன் (15-01-2020) புதன்கிழமை மாலை கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் ஜெயகௌரியின் அன்புக் கணவனும்,
அட்ஷை, இரட்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராமுப்பிள்ளை இராசரத்தினம் (இளைப்பாறிய தபால் அதிபர்), காலஞ்சென்ற பொன்னம்மா இராசரத்தினம் தம்பதியரின் அன்புக்குரிய மூத்த புதல்வனும்,
காலஞ்சென்ற சிவசிதம்பரம் (இளைப்பாறிய அதிபர்) மற்றும் தெய்வநாயகி தம்பதியரின் மருமகனும்,
அமிர்தகலா (Australia), சசிகலா (London), நித்தியகலா (Switzerland), ஈஸ்வரன் (London) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானரத்னம், அரவிந்தன், ஸ்ரீதர், சுதர்சினி, குகராஜா, உமாதேவகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரிக்கா, தர்ஷிக்கா கிரிஷ்வினி, செந்தூரன் யசோவதனா ஆகியோரின் அன்பு மாமாவும்,
தானிகா, சனோஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற யாழ் மாவட்ட கட்டட நிர்மாணி அம்பலம் முருகேசம்பிளளையின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான பண்டிதர் இராமுப்பிள்ளை இராசலிங்கம், சைவப்புலவர் பண்டிதர் வித்துவான் இராமுப்பிள்ளை திருநாவுக்கரசு, வடமாநில கல்விப் பணிப்பாளர் சுந்தரலிங்கம் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் இணுவில் கிழக்கில் அவரின் பிறந்த இல்லமான கலாபவனத்தில் (20-01-2020) திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் நடைபெற்று காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
"கலாபவனம்" இணுவில் கிழக்கு.
தகவல்: குடும்பத்தினர்
+94 77 249 2306, +94 76 750 9549, +94 75 508 8371
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2020 02:47)
