திருமதி. இராசரட்ண அம்மாள் குமாரசாமி (அம்மன் கிளி)
மறைவு: 08 ஜனவரி 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசரட்ண அம்மாள் குமாரசாமி அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை - நவரத்தினமாலை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற செல்லையா - செல்வமாணிக்கம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
லலித்தா (இலண்டன்), காலஞ்சென்ற மோகன் (கொழும்பு), சுந்தரேசன் (சரவணன் - இலண்டன்), பவானி (கனடா), யோகேந்திரன் (ராசு - இலண்டன்), யசோதரா (அவுஸ்திரேலியா), மதிவதனி (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயக்குமார், சிறீரஞ்சனி, குமாரலீலா, காலஞ்சென்றவர்களான சுகந்தி, நிமால்குமார் மற்றும் சிறீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நடேசபிள்ளை, ருக்மணிதேவி, காலஞ்சென்ற தவமணிதேவி (வண்ணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராகவன், சதீஷ், தர்சிகா, மகேஷ், நிருத்தன், வினித்ரா, ஜெயந், ஜனா, ரஞ்சன், யாழினி, சிந்துபிரியா, சிறீகாந்த், ராஜேந்திரன், ராஜயோகன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
ஏவா, சைரஸ், டெவன், லீலா, தாரகை, கீரன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-01-2026 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:00 - 2:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
