திருமதி. இராசரத்தினம் சுகிர்தாம்பாள் (மணி)
தோற்றம்: 05 ஜனவரி 1936 - மறைவு: 19 மே 2025
யாழ். சிறுப்பிட்டியை (சத்திரை) பூர்வீகமாகவும், மாத்தறையை பிறப்பிடமாகவும், புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசரத்தினம் சுகிர்தாம்பாள் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று புத்தூரில் சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் - தண்டிகைப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி - குஞ்சுப்பிளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற முத்துச்சாமி இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளன் (இலண்டன்), சத்தியசீலன் (சீலன் மாஸ்டர் - அவுஸ்திரேலியா), நந்தினி, சாந்தினி, சுகந்தினி, ஜெயசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மங்களேஸ்வரி, உமாதேவி, காலஞ்சென்ற இராசேந்திரம், ரவிச்சந்திரன், கிருபாகினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, செல்வநாயகம், நாகராஜா இராசாம்பிகை, மற்றும் இராசரத்தினம், ஜெயராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிரோஷன் - லாவன்னியா, ஜனனி - கௌத்தமன், சுஜி - ரவிசங்கர், சுஜன், அரவிந்தன், சிந்துஜன், கயல், காவியா ஆகியோரின் அருமை பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது சிவன்கோவில் வீதி, புத்தூர் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் புத்தூர் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
