திரு. இராசத்தினம் தவேந்திரா (தவம்)

(ஓய்வுபெற்ற உற்பத்தி முகாரி அஸ்பெஸ்டஸ் சீமெந்து இன்டஸ்றீஸ் இரத்மலானை,அகில இலங்கை சமாதான நீதவான்)

இராசத்தினம் தவேந்திரா (தவம்)

தோற்றம்: 25 பெப்ரவரி 1962 - மறைவு: 03 ஜூன் 2024

கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசத்தினம் தவேந்திரா (தவம்) ஓய்வுபெற்ற உற்பத்தி முகாரி அஸ்பெஸ்டஸ் சீமெந்து இன்டஸ்றீஸ் இரத்மலானை,அகில இலங்கை சமாதான நீதவான் அவர்கள் 03-06-2024ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் தையல்நாயகி தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும்,
 
காலஞ்சென்றவர்களான தியாகராசா முத்துப்பிள்ளை தம்பதியரின அன்பு மருமகனும்,
 
தேவனாயகி (ஓய்வுபெற்ற பதிவாளர் நாயகம் திணைக்களம் பத்தரமுல்லை சத்திய பிரமான மொழிபெயர்பபாளர், சமாதான நீதவான்) அவர்களின் பாசமிகு கணவரும்,
 
அனிதா, திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ரகுபரன், ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
புவனேந்திரா, சத்தியேந்திரா, ராஜேந்திரா ஆகியோரின் பாசமிகு சகொதரனும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 06-06-2-24ம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அரியாலை சித்திபாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2024 02:36)