Mrs. Rasasingham Indradevi

Rasasingham Indradevi

Deceased: 09 November 2025

மலேசியா சிறம்பானை பிறப்பிடமாகவும், கரணவாய் தெற்கு மற்றும் கரவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசசிங்கம் இந்திராதேவி அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசசிங்கம் அவர்களின் மனைவியும்,

பாஸ்கரன் (பாதுகாப்பு அலுவலர் - இலங்கை வங்கி, கோப்பாய்), சிறீதரன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்), பிரபாகரன் ஆகியோரின் தாயரும்,

சுகந்தினி, மகேஸ்வரி ஆகியோரின் மாமியாரும்,

அபிபரன், கலைநிலா ஆகியோரின் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி (தவம்), சாவித்திரிதேவி (ராசா), உமாதேவி (ஜெயம்), பூமாதேவி (ஜெகதா) மற்றும் சந்திராதேவி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தப்பு, தெய்வானை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் இலகடி வீதி கரவெட்டி மத்தியில் உள்ள பெறாமகள் வசந்தி (வைத்தியர்) அவர்களின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2025 00:00)