திரு. இராசதுரை இளங்கோவன்
தோற்றம்: 20 செப்டம்பர் 1970 - மறைவு: 04 ஜனவரி 2025
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், Basel Niederdorf - சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை இளங்கோவன் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை - புனிதவதி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - அன்னம்மா (புங்குடுதீவு 6ஆம் வட்டாரம்) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
இந்துமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அபிதன், அஜிதன், ராகிதன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
மனோகரன், நீலாம்பரன் (பரன்), பகீரதன் (பகி), வனஜா, தர்மவாசன் (வாசன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற சிவபாலன், தவபாலன், சுதமதி, ஜெயமதி, கோபலகிருஷ்ணன், பார்த்தீபன், யோகேஸ்வரி, வதனி, வினோதினி, சபேசன், தாமரைச்செல்வி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்
அபித், அபிஷேக், அபிசன், ஆருசன், பிரியங்கா, சாஜித், ஆதித் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
விஷால், அபிஷா, ஆதவன், ஆதவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
வேளருவி, வர்சிகா, வினோஜ், தர்சிகா, தனுஜன், ராகுல், விஷ்மன், சாதனா, பாருஷன், மகிஷா, அனீஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
கயேந்தினி அவர்களின் பாசமிகு சின்னமாமாவும்,
யாதவ் அவர்களின் ஆசை சின்னப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-01-2025 செவ்வாய், 08-01-2025 புதன், 09-01-2025 வியாழன் ஆகிய தினங்களில் பிற்பகல் 3.00 - 6.00 மணி வரை Aufbahrungshalle Friedhof Kilchmatt (Alte Landstrasse 93, 4436 Oberdorf, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-01-2025 வௌ்ளிக்கிழமை காலை 8.30 - 10.00 மணி வரை Friedhof am Hörnli (Hörnliallee 70, 4125 Riehen, Switzerland) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
