Mrs. Rasaturai Punithavathy (Radhi Akka)

Rasaturai Punithavathy (Radhi Akka)

Date of Birth: 02 June 1952 - Deceased: 06 November 2025

யாழ். வேலணை வடக்கு கண்ணா ஓடையைப் பிறப்பிடமாகவும், பெர்ணாந்து வீதி, கிராண்ட்பாஸ், கொழும்பு - 14 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசதுரை புனிதவதி அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் - நித்தியலெட்சுமி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற நாகநாதபிள்ளை - இராசம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபன் (இலண்டன்), பிரதீபா (கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

கிஷாந்தன் (கனடா), அஞ்சலா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்மாவதி (கனடா), காலஞ்சென்ற சிவகலை (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோரியும்,

அவினாஷ் (கனடா), ஆதித் (கனடா), றியா (கனடா), டிஷான் (கனடா) ஆகியோரின் பாட்டியும்,

இராசம்மா, கமலாம்பிகை (கனடா) ஆகியோரின் பெறாமகளும்,

நாகராசாவின் மருமகளும்,

கஜேந்திரன், சியாணிகா ஆகியோரின் சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-11-2025, 08-11-2025 ஆகிய இரு தினங்கள் அன்னாரது கொழும்பு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அன்னாரது சொந்த ஊரான வேலணை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

முகவரி:-

இல- 31/11, பெர்னாண்டோ பிளேஸ்,

கிராண்பாஸ், கொழும்பு-14.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2025 00:00)