திரு. இராசு தர்மகுலசிங்கம் (தறுமு)
(சமாதான நீதவான், ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர் தென்னை வள அபிவிருத்திச் கூட்டுறவுச் சங்கம் - யாழ்ப்பாணம்)
தோற்றம்: 18 ஜனவரி 1935 - மறைவு: 31 ஜனவரி 2025
யாழ். கந்தர்மடம் பழம் வீதியைப் பிறப்பிடமாகவும், றக்கா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசு தர்மகுலசிங்கம் அவர்கள் 31-01-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி (இராசு) - இராசமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் - விக்தோரியா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அனற்மேரி மெற்றில்டா அவர்களின் பாசமிகு கணவரும்,
தனுஸ்யா (இலண்டன்), பிரியங்கா (சட்டத்தரணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சர்மிலன் (இலண்டன்), சலீஸ்ரன் (மருத்துவ விற்பனைப் பிரதிநிதி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதிக்ஷா (இலண்டன்), தக்ஷிதா (இலண்டன்), ஆதிராசாய் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான குணசிங்கம், விஜயகுமாரி, துரைராஜசிங்கம் மற்றும் தனபாலசிங்கம், இராஜகுமாரி, செல்வகுமாரி, ஞானகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், அனற்கினறிங் (ஜேவதி) மற்றும் இராஜேந்திரம், சாந்தலிங்கம், அம்பிகாவதனி, றதனி, றெஜினோல்ட் (ஜெயசீலன் - ஜேர்மனி), அனற்வியாட்றிஸ் (கனடா), அனற்யூலியற் (ஜெயந்தி - டென்மார்க்), அனற்டொலிகிறேஸ் (டர்சினி - கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
