திருமதி. இராதகிருஸ்ணமூர்த்தி குகமலர் (மலர்)

(ஓய்வுநிலை உத்தியோகத்தர் - அச்சுவேலி ப.நோ.கூ சங்கம்)

இராதகிருஸ்ணமூர்த்தி குகமலர் (மலர்)

தோற்றம்: 30 ஜனவரி 1963 - மறைவு: 30 நவம்பர் 2025

யாழ். இடைக்காட்டை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராதகிருஸ்ணமூர்த்தி குகமலர் அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசப்பிள்ளை - குழந்தையார் தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான தணிகாசலம் - கதிராசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

இராதகிருஸ்ணமூர்த்தி (ராதா - ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சௌமியா (இலண்டன்), சாருகன் (சாரு - இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிராஜ், வினோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நேஹாவின் பாசமிகு அம்மம்மாவும்,

குகநேசன் (கனடா), காலஞ்சென்ற குகநாதன், குகதாசன் (கனடா), குகப்பிரியா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேசமூர்த்தி (இலங்கை), சிவமூர்த்தி (மூர்த்தி - கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-12-2025 வியாழக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரயு இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆவரங்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/11/2025 17:24)