திரு. இரத்தினம் ஜெயச்சந்திரன்
(நீர்கொழும்பு றியோ ஐய்கிறீம்)
தோற்றம்: 11 மார்ச் 1965 - மறைவு: 21 செப்டம்பர் 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினம் ஜெயச்சந்திரன் அவர்கள் 21-9-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இரத்தினம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம் - மேரி திரேசம்மா தம்பதியினரின் மருமகனும்,
ஜெயவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனாஜினி, ஜனனி (அவுஸ்திரேலியா), ஜெயந்தினி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், ஜெகதீஸ்வரி, ஜெயக்குமார் (நோர்வே), ஜெயபாஸ்கரன், ஜெயசுதாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சபீகரன், கிரீசன், ஜெறோம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹஷ்வின், ஜொவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-09-2025 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இல-114/1, கடற்கரைத்தெரு, நீர்கொழும்பில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
