திரு. இரத்தினம் சண்முகநாதன்
தோற்றம்: 04 டிசம்பர் 1945 - மறைவு: 09 ஆகஸ்ட் 2026
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை - இலிங்கநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இரத்தினம் சண்முகநாதன் அவர்கள் 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா - இலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
சண்முகவதனி (இலண்டன்), மதிவதனி, கலாவதனி (பிரான்ஸ்), ஜெயபாலினி, அதிஸ்டரூபி (இலண்டன்), குமணன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வநாதன் (இலண்டன்), அன்பழகன் (சமூக சேவைகள் திணைக்களம் - திருகோணமலை), நவகுணநாதன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சுகேந்திரன், பற்குணன் (இலண்டன்), சிவதர்ஷினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிதுசன், அச்சரன், ஸதுர்த்திகா, கவிசரன், பிரவீன், பிரனிசன், ஹிசாந் (திரு. புனித சூசையப்பர் கல்லூரி), துசாரா, ரக்சரன், கர்ணிகா, ஆருஷ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மாலை 04.30 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 952 8478
+44 741 547 2593
+33 652 615 181
www.tamilthakaval.org
