திரு. விஸ்வகுல திலகர் இரத்தினம் தங்கேஸ்வரன் (பத்தர்)

விஸ்வகுல திலகர் இரத்தினம் தங்கேஸ்வரன் (பத்தர்)

தோற்றம்: 15 அக்டோபர் 1947 - மறைவு: 23 ஆகஸ்ட் 2025

யாழ். கல்வியங்காடு கலைமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினம் தங்கேஸ்வரன் அவர்கள் 23-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் - இரத்தினம் தம்பதியினரின் அன்பு புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான அருட்பிரகாசம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இதயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

இரத்தினாகரன், லக்சிகா, தயானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிவேஜா, தசீந்திரன், ஜனார்த்தனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவானி, சாக்தி, தங்கவேலன், கரீஷ்மன், டிசான், ஸப்ரிதி, சாயித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-08-2025 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணியளவில் கலைமகள் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/08/2025 04:00)