திருமதி. இரத்தினமணி அம்மாள் செல்வதுரை
தோற்றம்: 28 பெப்ரவரி 1936 - மறைவு: 28 ஜூலை 2026
மாத்தளையைச் சேர்ந்த திருமதி. இரத்தினமணி அம்மாள் செல்வதுரை அவர்கள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், செல்லையா செல்வதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வமணி (ஓய்வுபெற்ற ஆசிரியை - பாக்கியம் தேசிய கல்லூரி, மாத்தளை), Dr. தயானந்தன் (கனடா), யோகேந்திரன் (எஸ்கோ ஹட்வெயார், மாத்தளை), காலஞ்சென்ற விஜயலெட்சுமி, கல்யாணி (அவுஸ்திரேலியா), ஹரிச்சந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சண்முகராஜா ராவ், கிருஷ்ணன் தியாகராஜா (அவுஸ்திரேலியா), சத்தியபாமா (கனடா), ரேணுகாதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை), நிரோஷா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மனுதர்ஷனா (அவுஸ்திரேலியா), திவிதகேஷனா (இந்திய உயர்ஸ்தானிகராலயம் - கொழும்பு), அருண் (கனடா), நிராஜ் (கனடா), இந்துஜா (அமரிக்கா), அஸ்விந் (டுபாய்), ஹஷான் (அவுஸ்திரேலியா), சனோஜன் (அவுஸ்திரேலியா), கயோஷ் (அவுஸ்திரேலியா), ஹரின் (கனடா) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-07-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இல- 10, இக்கொல்ல மாவத்தை, மாத்தளை இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நாகொல்ல மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
யோகேந்திரன் (மகன்):- +94 77 758 1548
செல்வமணி (மகள்):- +94 77 172 6720
www.tamilthakaval.org
