திரு. இரத்தினசாமி பாஸ்கரசுந்தரம்
(ஓய்வுபெற்ற பிரதம இரசாயனவியலாளர் - வாழைச்சேனை காகித ஆலை)
மறைவு: 28 அக்டோபர் 2025
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வாழைச்சேனை மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினசாமி பாஸ்கரசுந்தரம் அவர்கள் 28-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறுவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசாமி - ஆத்தாட்ப்பிள்ளை தம்பதியினரின் இளைய புத்திரரும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை - தையல்நாயகி தம்பதியினரின் மூத்த மருமகனும்,
விமலேந்திராணி அவர்களின் அன்புக்கணவரும்,
சுகன்யா (சுவிற்சர்லாந்து), நிசாஹரன் (கனடா), விமலாஹரன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிசங்கர் (சுவிற்சர்லாந்து), சசிகலா (கனடா), ரத்னா (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்வினி (சுவிற்சர்லாந்து), அனிக்கா (கனடா), அபினா (கனடா), ரத்னிகா (கொழும்பு), திருநேயன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், குமாரசுந்தரம், கார்மேகசுந்தரம் மற்றும் நிர்த்தனசுந்தரம் (கொழும்பு), காலஞ்சென்ற கணேசசுந்தரம், ஞானாம்பிகை (கனடா), விஜயாம்பிகை (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, மகேஸ்வரி (தொண்டைமனாறு), காலஞ்சென்ற லக்சுமிதேவி, சுந்தரி, காலஞ்சென்ற நடேசன், சுசீலாதேவி (அவுஸ்திரேலியா), பொன்னுச்சாமி (கனடா), காலஞ்சென்ற ஜெயசோதிவேல், நிர்மலா (வல்வெட்டித்துறை), சக்திவேல் (கனடா), ஞானவேல் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
விமலாஹரன்:- +94 77 436 1068
நிசாஹரன்:- +1 437 443 5377
www.tamilthakaval.org
