Mrs. Rathinasingham Vanmadeswary
Deceased: 31 May 2026
முல்லைத்தீவு - முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கருவேலன் கண்டல் ஒட்டிசுட்டானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரத்தினசிங்கம் வன்மதேஸ்வரி அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பாக்கியதுரை - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமிகாந்தன், சந்திரபோஸ், சரோஜா மற்றும், கமலாதேவி, லீலாவாதி (குஞ்சு), காலஞ்சென்ற யோகராசா (யோகன்), யோகரத்தினம் (தம்பு), காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி (ராணி), இந்திராணி, சாந்தலிங்கம், மற்றும் சந்தானலட்சுமி (பவா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
சிவசத்தி (வவுனியா), குலம் (பிரான்ஸ்), சிவரூபன் (பிரான்ஸ்), பஞ்சகௌரி (பவானி- ஆசிரியை, வற்றாப்பளை மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயகாந்தன் (கோகுலன்), லினிஷா (கிராம உத்தியோகதர் பலம்பாசி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கீர்த்தனா (கால்நடை அவுவிருத்தி போதனாசிரியர் வவுனியா வடக்கு), கபில்தாஸ் (திட்ட உத்தியோகஸ்த்தர் போஷ்டோ) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சதுர்ஜாவின் அன்புபேத்தியும் ஆவா.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை கருவேலன் கண்டலில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் மானுருவி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
