திரு. இரத்தினவடிவேல் சிவனருட்சோதி
தோற்றம்: 29 டிசம்பர் 1958 - மறைவு: 29 மே 2026
யாழ். வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், காந்தி வீதி, நெடியகாடு, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினவடிவேல் சிவனருட்சோதி அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினவடிவேல் - வள்ளியம்மாள் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிலனின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சக்திவேல், சத்தியவாணி, தங்கவேல், மாணிக்கவாசகர், வபிஷ்டாதேவி, இரத்தினஜோதி, கலாவாணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பிரேமகுமாரி, செந்திவேல், பவானி, ஜெயந்தி, மதிவண்ணன், யோகசாந்தி, உருத்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும்,
லட்சுமிதேவி, நேசமலர், முருகவேல், கனகராணி, காலஞ்சென்றவர்களான நகுலேஸ், பரமகுரு, மற்றும் சத்தியேஸ்வரி, சகுந்தலா தேவி, சித்திராதேவி, இன்பகுரு ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 661 8129
www.tamilthakaval.org
