Mr. Rathinavadivel Sothiparamanantham

(இளைப்பாறிய கல்வித் திணைக்கழக உத்தியோகத்தர், AGA – கிண்ணியா)

Rathinavadivel Sothiparamanantham

Deceased: 27 January 2025

யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரெத்தினவடிவேல் சோதிப்பரமானந்தம் அவர்கள் 27-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரெத்தினவடிவேல் – மனோன்மணி தம்பதியினரின் ஏக புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான வைரமுத்து சித்தப்பா – நாகபூஷணி தம்பதியினரின்  மருமகனும்,

காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

திருநாவுக்கரசு, புஷ்பலதா, இரெத்தினவடிவேல் (கண்ணன்), காலஞ்சென்ற சிவகுமார், உமாசங்கர் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சீவரெட்சகம் அவர்களின் சகோதரரும்,

காலஞ்சென்ற திரு. பாலசுப்பிரமணியம் (இளைப்பாறிய உயர் நீதிமன்ற முதலியார்) அவர்களின் மைத்துனரும்,

நவரத்தினம், தருமரத்தினம், தங்கரத்தினம், துரைரத்தினம், ஜெயரத்தினம், பத்மினி, சுசிலா, ஸ்ரீபார்வதி, வாணி, கல்யாணி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

திவ்யா, மயூரி, ஜெனனி, காலஞ்சென்ற அஸ்வின், ஆகாஷ், சஜீனா, பிரவீனா, அகிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஸ்கைலா, ரேடன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

காலஞ்சென்றார்களான கமலாதேவி, சாந்தமணி, கந்தசுவாமி மற்றும், பாலசுப்பிரமணியம் அவர்களின் மைத்துனரும் ஆவார்.

காலஞ்சென்றவர்களான மௌனகுரு, வைத்தீஸ்வரன் ஆகியோரின் சகலனும்,

நிர்மலா, கெளரி ஆகியோரின் ஒன்று விட்ட சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-01-2025 புதன்கிழமை மாலை 7.00 -10.00 மணி வரையும் AJAX CREMATORIUM VISITATION CENTRE (384, FINLEY AVENUE, AJAX, ON, L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 30-01-2025 வியாழக்கிழமை காலை 8.00 - 11.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2025 05:00)