திரு. இரத்தினசபாபதி குருபரன்

(ஓய்வு பெற்ற யாழ் மாவட்ட உத்தியோகத்தர், இலங்கை செஞ்சிலுவைச் சங்க சண்டிலிப்பாய் பிரிவு - முன்னாள் தலைவர்)

இரத்தினசபாபதி குருபரன்

தோற்றம்: 07 செப்டம்பர் 1958 - மறைவு: 29 நவம்பர் 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும்,  நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினசபாபதி குருபரன் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (விதானையார்-நெடுந்தீவு)-சற்குணம் (ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

உதயவேணி (ரஜனி-ஓய்வுபெற்ற யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக்  கணவரும்,

தயாபரன் (ஜேர்மனி), சிவபரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

மதன்ராஜ் (பொறியிலாளர்- ஜக்கிய மக்கள் சக்தி யாழ் மாவட்ட அமைப்பாளர், ஊர்காவற்துறையை பிரதம அமைப்பாளர்) அவர்களின் அன்பு தந்தையும்,

கௌதமியின் பாசமிகு மாமனாரும்,

ஜெயரட்ணராஜா (ஓய்வுபெற்ற உப அதிபர்- யாழ் இந்து கல்லூரி) - காலஞ்சென்ற ஜெயேந்திரா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

சசிகலா (ஜேர்மனி), சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினித்தா (கனடா), ஜெனித்தா (ஜேர்மனி), சிந்துவர்மன் ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,

காலஞ்சென்ற புவேந்திரராணி, கிருபானந்தன், சிவானந்தன் (கனடா), கமலராணி (பிரான்ஸ்), அழகானந்தன் (கனடா) ஆகியோரின் உடன் பிறந்த சகோதரனும்,

காலஞ்சென்ற கிருஷ்ணவேணி, கமலவேணி (இலண்டன்), குமரசூரியர் (இலண்டன்), கேதீஸ்வரநாதன், சிவஞாணதேவி (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

சுபாசினியின் (கனடா) பாசமிகு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் இல-30/1, நீக்கலஸ் லேன், கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2024 05:00)