திருமதி. இரத்தினேஸ்வரி சுதந்திரதாஸ் (ராதா)
தோற்றம்: 19 மே 1946 - மறைவு: 12 ஜூலை 2025
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினேஸ்வரி சுதந்திரதாஸ் அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விவேகானந்தன் - ராஜரத்தினம் அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாரத்தினம் - கண்மணி தம்பதியினரின் அன்புமருமகளும்,
சுதந்திரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
குமரனின் பாசமிக்க தாயாரும்,
சோஹியின் (Zoe) அன்பு மாமியாரும்,
லானா (Lahna) வின் பேத்தியும்,
காலஞ்சென்ற ஆழிக்குமரன் ஆனந்தன், ரஞ்சிமலர் (ஐக்கிய அமெரிக்கா), கலாநிதி. நித்தியானந்தன் (ரஞ்சன் - பிரித்தானியா), காலஞ்சென்ற ரங்கமணி, ரூபமணி (ரூபா) மற்றும் சிவானந்தன் (பாபு - ஜேர்மனி), ரவீந்திர ஆனந்தன் (ரவி - பிரித்தானியா), கருணானந்தன் (கண்ணன் - பிரித்தானியா), கோகிலா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சசிந்திரகுமார் (சசி), ஜெயதாஸ் (ரவி) மற்றும் ஸ்ரீமுருகன் (ஸ்ரீ - பிரித்தானியா), சசிகலாதேவி (கலா - இலங்கை), செல்வராணி (கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-07-2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2:00 - 6:00 மணி வரை Asian Funeral Care (66/67, Monarch Parade, London Road, Mitcham Surrey CR4 3HB) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:30 - 10:30 மணி வரை அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:10 மணியளவில் திருவுடல் North East Surrey Crematorium (Lower Morden Lane, Morden Surrey SM4 4NV) இல் தகன் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
வீட்டு முகவரி:-
73, Pine Walk,
Carshalton Becches,
Surrey, SM5 4HA.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
