திருமதி. ரட்ணராஜா ஞானேஸ்வரி
தோற்றம்: 12 நவம்பர் 1950 - மறைவு: 04 டிசம்பர் 2024
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், 588/8, நாவலர் வீதி, கச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரட்ணராஜா ஞானேஸ்வரி அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் - பாக்கியலட்சுமி தம்பதியினரின் புத்திரியும், காலஞ்சென்ற வர்களான சின்னத்துரை - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற ரட்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
டினேஸ்க் (ஜனசக்தி இன்சுரன்ஸ், யாழ்ப்பாணம்), டினேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கயாழினி (ஆசிரியை - யாழ். கைதடி முத்துக்குமாரசுவாமி ம.வி), சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சதானந்தன், நித்தியானந்தன், மனோகரன், ரஞ்சிதராஜா, லோகேஸ்வரன் மற்றும் இந்துமதி (கனடா) ஆகியோரின் சகோதரியும்,
தர்மதுரை (கனடா), காலஞ்சென்றவர்களான யோகராஜா, சேதுராஜா, சிவராஜா, தர்மராஜா, சந்திரோதயம், சிவபாக்கியம், முகுந்தராஜா மற்றும் குகராஜா (திருகோணமலை), இந்திராணி (மட்டக்களப்பு), சரஸ்வதி (கனடா), காலஞ்சென்ற சண்முகராஜா ஆகியோரின் மைத்துனியும்,
லருண், நௌனீகன், யோய்சாய், ரகுராம், காருண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-12-2024 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
