திருமதி. இரத்தினசிங்கம் மகேஸ்வரி
தோற்றம்: 16 மே 1933 - மறைவு: 07 ஜூன் 2026
யாழ். கரணவாய் மத்தி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினசிங்கம் மகேஸ்வரி அவர்கள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அன்னம்மா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமணி, ஈஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோவிந்தராஜன், சிவராஜி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெசிற்றா, மீனுஷா, லாவணியா, துஷிவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கைலன், மைல்ஸ் ஆகியோருன் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-06-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 8:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ரமணி (மகள்):- +1 647 980 2424
ஈஸ்வரன் (மகன்):- +1 978 888 7775
www.tamilthakaval.org
