Mr. Raveendiran Ramalingan

(Customized Delivery Service)

Raveendiran Ramalingan

Date of Birth: 17 September 1966 - Deceased: 26 November 2025

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரவீந்திரன் இராமலிங்கம் அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - அருளம்மா (கனகம்மா) தம்பதியினரின் அன்பு மகனும்,

புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை சேர்ந்த நெல்லைநாதன் - பத்மாவதி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பகீரதி அவர்களின் அன்புக் கணவரும்,

Sarah, Daniel, Olivia ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சக்தி சிவானந்தா (ஜேர்மனி), சரோஜா (ஜேர்மனி), இராஜேந்திரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற விமலாதேவி, சுலோசினா (கனடா), சுபாஜினி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாளவதி, செல்வக்குமாரன், கனகேஸ்வரி, சற்குணலிங்கம், ஆனந்தராஜன், மாலினி (பிரித்தானியா), நளாயினி (கனடா), சுகிர்தன் (கனடா), கிரிசாந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருபானந்தன், நரேந்திரன், சுஜாதா, சுரேகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று மாலை 6:00 - 8:00 மணி வரை  Grace New Covenant Pentecostal Church (1800 Ellesmere Rd, Scarborough, ON M1H 2V5, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 02-12-2025 செவ்வாய்க்கிழமை மேற்குறிப்பிட்ட முகவரியில் காலை 9:30 - 11:30 மணி வரை நல்லடக்க ஆராதனை நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/11/2025 00:00)