Mr. Raveendran (Ravi) Manickam

(நாதஸ்வர வித்துவான்)

Raveendran (Ravi) Manickam

Deceased: 08 November 2024

யாழ். நாச்சிமார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பாரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கம் ரவிந்திரராசா அவர்கள் 08-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,

பழனியாண்டி-நாகேஷ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

சண்முகபிரியா (பிரியா)அவர்களின் அன்புக்கணவரும்,

ஆகாஷ், அப்சரா, ஆதர்ஷ் ஆகியோரின் அன்புத்தகப்பனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை 95 rue Marcel Sembat, 93430 Villetaneuse எனும் முகவரியில் நடைபெற்று, பிற்பகல் 15.30 மணியளவில் Crématorium du Père Lachaise (55 rue des Rondeaux, 75020 Paris) எனும் முகவரியில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"அமைதியான தெய்வமே எம்மை மறந்து போனதென்ன உங்களை உங்கள் அன்பை யார் இனி தருவார் உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் ஓம் சாந்தி "
- ஜரீனா சொகுசு பஸ் சேவை (France, 16/11/2024 09:49)
" நாதஸ்வர வித்துவான் அண்ணன் மாணிக்கம் ரவி உங்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் இந்த உலகில் நிம்மதியான வாழ்கை இல்லை என்று நினைக்காமல்மீண்டும் திரும்பி வா அண்ணா உங்களை போல அன்பு காட்ட இனி யார் உண்டு "
- Nathan itr radio france (பிரான்ஸ், 16/11/2024 09:40)
"இறுதி வணக்க அஞ்சலி! ___________________ அமரர் நாதஸ்வர வித்துவான் ரவீந்திரன் மாணிக்கம் என்பவருக்கான இறுதி வணக்க அஞ்சலி! பேரன்பு கொண்ட மதிப்புக்குரிய எனது அருமை நண்பரும்! நாதஸ்வர வித்துவானுமான ரவீந்திரன் மாணிக்கம் என்பவரை! பல்லாண்டுகளாக நான் அறிவேன்! ஈழ தேசமாம் நாச்சிமார் கோவில டியைப் பிறப்பிடமாகக் கொண்டவரானாலும்! புலம்பெயர்ந்து பிரான்ஸ் தேசத்தில்! 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்த இவர்! என்னோடு நன்கு நெருங்கிப் பழகிய உற்ற நண்பனும் ஆவார்! பல்லாயிரம் பேரின் பாராட்டைப் பெற்ற! நாதஸ்வர கலை ஞான சக்கரவர்த்தியாவார்! பற்பல பட்டங்கள் தங்கப்பதக்கங்கள் பல விருதுகள் பெற்று அனைவரின் நன்மதிப்பையும் பெற்ற தோடு! எண்ணற்ற திருமணங்கள் பூப் புனித நீராட்டு விழாக்கள் மற்றும் மங்கள நிகழ்வுகள்! ஆலய திருவிழாக்களில் அன்னாரின் நாதஸ்வர கானமே இன்னிசையாக அனைவர் காதுகளிலும் ஒலிக்கும்! அந்த அற்புதமான நாதஸ்வர இசை சக்கரவர்த்தி! காத்திகைத் திங்கள் எட்டாம் நாள் 2024 ஆம் ஆண்டு அன்று! எமையெல்லாம் கலங்க வைத்து! இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற செய்தி அறிந்து! தாங்க முடியாத மனவேதனை அடைகின்றேன்! அன்பு மனைவி சண்முகப்பிரியாவுடன் இல்லற வாழ்வில் இணைந்த இவருக்கு! முத்தான மூன்று பிள்ளைகளும் இருக்கின்றார்! மூத்த மகன் ஆகாஷ் அன்பு மகள் அப்சரா இளைய மகன் அதர்ஸ் ஆகிரோடு ஆனந்த வாழ்வு வாழ்ந்து வந்த இவர்! இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுகயீன முற்றிருந்து! மீழாத் துயில் கொண்ட இசை வித்தகரே! மங்கல இசையில் மதிநுட்பம் நிறைந்தவரே! ஆலயப் பணியிலும் ஆர்வம் கொண்ட வரே! அன்பு மனைவி அன்பான பிள்ளைகள் உற்றார் உறவுகள் நண்பர்கள் அனைவரையும் தவிக்க விட்டு! மீண்டு வர முடியாத தூரம் சென்றது ஏன் ஐயா! அனைவரிடத்திலும் அன்பு பண்பு பாசத்தோடு பழகுகின்ற நற்பண்புகள் நிறைந்தவரே! எல்லோரையும் அரவணைத்து வழி நடக்கும்! அற்புதமானவரே நல் மனிதநேய மாண்புகள் நிறைந்தவரே! இனி எப்போதுமே உங்கள் முகத்தைக் காண முடியாது! மரணம் எனும் மாயைக்குள் மறைந்து விட்ட நாதஸ்வர இசைத் திலகமே ஐயகோ! உற்ற நண்பனே உன்னையா நாம் இழந்தோம்! இசையால் எமையெல்லாம் மகிழ்வித்த நீ இன்று! அனைவரையும் கலங்க வைத்து மூச்சடங்கிப் போனது ஏன் ஐயா! குடும்பத் தலைவனான உன்னை இழந்த உன் வீடு இன்று! இருள் மண்டிக் கிடக்கிறது! மீண்டும் ஒருமுறை கண்திறந்து பாராயோ எனும் ஏக்கம்! அனைவர் நெஞ்சிலும் அலைபாய்கிறதே ஆருயிர் நண்பனே! மனிதனாக மண்ணில் உதித்தால் மரணம் ஒரு நாள் நிச்சயம் என்பது! அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால்! அது நிகழும் காலங்கள் நேரங்கள் தான் எங்களை கலங்க வைத்து விடுகிறது! எது எப்படியோ மரண தேவன் பிடியில் சிக்கி மீளாத் துயில் கொண்ட உந்தனுக்கு! என் குடும்பத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கி! விடை பகருகின்றேன் அருமை நண்பனே சென்றுவா! உன் உயிர் உடல் எமை விட்டு மறைந்தாலும்! உன் உருவம் என் விழித்திரையில் என்றும் நிலைத்திருக்கும்! "
- Nathan amolotpavanathan (France , 16/11/2024 07:05)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/11/2024 05:00)