Mr. Raventhiranathan Kumarasingham

(ஓய்வுபெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர்)

Raventhiranathan Kumarasingham

Date of Birth: 03 November 1957 - Deceased: 29 December 2025

யாழ். வீமன்காமம் வடக்கை பிறப்பிடமாகவும், ஓமந்தை – வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. இரவீந்திரநாதன் குமாரசிங்கம் அவர்கள் தனது 68-ஆவது வயதில், 29-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசிங்கம் (ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) - தங்கம்மா தம்பதியினரின் அருமை மகனும்,

வாசுகி (ஓய்வுபெற்ற ஆசிரியை - CCTMS) அவர்களின் அன்புக் கணவரும்,

கீர்த்தனன் (சட்டத்தரணி - வவுனியா), பிரியங்கா (சட்டத்தரணி - கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரூபா (சட்டத்தரணி - வவுனியா) அவர்களின் அன்பு மாமனாரும்,

அருந்தவநாதன் (ஓய்வுபெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர், யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அருட்செல்வி நந்தகுமார் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-12-2025 செவ்வாய்கிழமை அன்று ஓமந்தை அரசவீட்டுத் திட்டம் - முதலாவது ஒழுங்கையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நண்பகல் 12.30 மணி முதல் 1.45 மணி வரை நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2025 00:00)